இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் – சீனா கோரிக்கை!

காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையேயான மோதல் மிக பயங்கரமாக வெடித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஒரு வார காலமாகவே பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஏழு நாட்களாக நடைபெறக்கூடிய இந்த மோதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேலிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலாக ஹமாஸ் போராளிகள் வான் வழித் தாக்குதல் நடத்துவதும் என தொடர்ந்து மோதல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில் பல பெண்கள், குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது. மேலும் சர்வதேச நீதிக்கு எதிரான பக்கத்தில் அமெரிக்கா நிற்பதால், இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி அவர்களும் கூறியதாக சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் சீன ஆதரவு அளிப்பதாகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal