UEFA champions : மீண்டும் எம்பாப்பே அசத்தல் ..! காலிறுதி சுற்றில் PSG ..!

UEFA champions : கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் ரவுண்டு அப் 16 ஆட்டத்தின் பிஎஸ்ஜி மற்றும் ரியல் சோசிடாட் அணிகள் மோதியது. இதற்கு முன் நடந்த முதல் லெக் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி இருந்தது. அதனால் இந்த 2-வது லெக்கில்  3 – 0 என்று வெற்றி பெற்றாலே ரியல் சோசிடாட் அணியால் வெற்றி பெற முடியும் எனும் முனைப்பில் அந்த அணி இருந்தது.

Read More :- UEFA சாம்பியன் : ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்ற பிஎஸ்ஜி ..!

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் கோல் வாய்ப்பை பிஎஸ்ஜி தவறவிட்டது. அதன் பிறகு ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில்  கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) அபாரமான கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனால் 0-1 என்ற கணக்கில் இந்த போட்டியிலும், 3-0 என்ற கணக்கில் (இரண்டு லெக் போட்டியையும் சேர்த்து) லெக்கிலும் முன்னிலை பெற்றது.

இதனால், 1-0 என ஆட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்தது. ஆட்டத்தின் 2-வது பாதி தொடங்கிய போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலே தொடங்கியது. ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு சிறப்பினை கோலை பதிவு செய்தார் கிலியான் எம்பாப்பே. இதனால் 0-2 என்ற கணக்கில் (4-0 என்று லெக் கணக்கில்) PSG முன்னிலையில் பெற்றது.

Read More :- #LaLiga 2024 : லூகா மோட்ரிச் அதிரடியால் ரியல் மாட்ரிட் அணி வெற்றி ..!

அதை தொடர்ந்து கடுமையாக போராடிய ரியல் சோசிடாட் அணி ஆறுதல் கோலாக மெரிநோ ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். பிறகு ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கணக்கில் பிஎஸ்ஜி அணி முன்னிலை பெற்று போட்டியில் வெற்றி பெற்றதோடு. லெக் கணக்கிலும் 4-1 என முன்னிலை பெற்றது. இந்த அதிக கோல் கணக்கின் அடிப்படையில் பிஎஸ்ஜி அணி அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. சிறப்பாக விளையாடிய  கிலியான் எம்பாப்பே ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment