2019, 2021 தேர்தலில் கூட்டணி வெற்றிக்குப் பாடுபட்டவர் உதயநிதி.! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து.!

2019, 2021 தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டவர் உதயநிதி. அமைச்சர் பதவியில் அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். 

இன்று தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகந்துள்ளது. முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் மாற்றம் கண்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். இதற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில் , கடந்த 2019, 2021 தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட்டவர் உதயநிதி. அமைச்சர் பதவியில் அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என அவர் கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment