‘மன் கி பாத்’துக்கு பதிலாக டெல்லியில் கர்ஜித்தது ‘ஜன் கி பாத்’..!உத்தவ் தாக்கரே தாக்கு

டெல்லியில் ‘மன் கி பாத்’துக்கு பதிலாக ‘ஜன் கி பாத்’தை பிரதமரின் குரலுக்கு பதிலாக மக்களின் குரல் தான் ஓங்கு ஒலித்துள்ளது என்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும்பாண்மைப் பலத்தோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கையில்  மராட்டியம் மற்றும் சிவசேனா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.  தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

அந்த விமர்சனத்தில் டெல்லி தேர்தலில் ஒரு அரசாங்கம் (மத்திய அரசு) வெற்றிபெற முழு அரசு எந்திரத்தையும் பயன்படுத்தியது. ஆனால் என்ன செய்வது துடைப்பத்தின் முன்னால் அது தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் எதிரிகள் எல்லோரும் தேசவிரோதிகள். தாங்கள் மட்டும் தேசத்தை நேசிப்பவர்கள் என்ற மாயையில் காட்டிய சிலர்  இருந்தனர்.ஆனால் டெல்லி மக்கள்  அவர்களுக்கான இடத்தை காட்டிவிட்டனர். வெற்றிப்பெற்றுள்ள கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டார்.

தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சர்வதேச பிரச்சினையை கொண்டு வந்து மக்களின் மனதை மாற்ற பாஜக முயன்றது. ஆனால் அது ஒன்றும் நடக்கவில்லை.டெல்லியில் ‘மன் கி பாத்’துக்கு பதிலாக ‘ஜன் கி பாத்’தை  அதாவது பிரதமரின் குரலுக்கு பதிலாக மக்களின் குரல் தான் மக்கள் வெற்றி அடைந்தது என்று கூறியுள்ளார்

author avatar
kavitha