உத்தரபிரதேசத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன: யோகி ஆதித்யநாத்

தொற்றுநோயின் இரண்டாவது அலை புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடிக்க நன்றி

லக்னோ மாநிலத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தனது அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (மே 10) தெரிவித்தார்

மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலையைச் சமாளிக்க ரயில்வே மற்றும் விமானப்படை உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடிந்தது என்றும் இதற்காக மோடி அரசுக்கு நன்றி எனவும் அவர் கூறினார். இதன்மூலம் நாங்கள் 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மாநிலம் முழுவதும்  வழங்கினோம், மேலும் மாநிலத்தில் புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் வழங்கியுள்ளோம். முதல் கட்டத்தில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் செறிவூட்டிகளும் வழங்கப்படும், ”என்றார்.

முன்னதாக ஆதித்யநாத் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறியிருந்தார், மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக பொய்யாக புகார் கூறும் தனிநபர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ மே 17 அன்று காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது.