மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி & உதவியாளர் சஸ்பெண்ட்!

அரியலூர் மாவட்டத்தில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் பணம் கேட்ட நெல்கொள்முதல் அதிகாரிகள் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை அருகே நெல் கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. குழுமூர் எனும் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மை என்பவர் 62 நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த நெல் கொள்முதல் உதவியாளர் சிவசக்தி என்பவர் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் எனும் கணக்குக்கு பணம் தரவேண்டும் என கூறி பணத்தை பெற்றுள்ளார். இதனை வள்ளியம்மை தனது உறவினரான அமுதக்கண்ணன் என்பவரிடம் மூட்டைக்கு 40 ரூபாய் என்னிடமிருந்து வாங்கினார்கள் என கூறியுள்ளார்.
எனவே,வள்ளியம்மையின் உறவினர்கள் நெல்கொள்முதல் உதவியாளர் சிவசக்தியிடம் பணம் வாங்கியதற்கான காரணம் என்ன எனக் கேட்டு அதனை வீடியோவாக எடுத்து அரியலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக பிராந்திய மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரனுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் விசாரணை நடத்தியதில் மூட்டை ஒன்றுக்கு தலா 40 ரூபாய் என வசூல் செய்த கொள்முதல் அதிகாரி வரதராஜன் மற்றும் அவரது உதவியாளர் சிவசக்தி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
author avatar
Rebekal