பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது – கிரண்பேடி

பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒருநா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல  மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசு பல  விதித்தாலும், பலர் இந்த விதிமுறைகளை மீறி  நடக்கின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது. மக்கள் சட்டத்தை பின்பற்றாததே, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு முழு காரணம். ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில், ஒரு மைல் தொலைவுக்கு முண்டியடித்துக் கொண்டு நின்று மதுபாட்டிலை வாங்கினர்.

விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் கொண்டாட சொல்லி அறிவுறுத்தியும், அனைவரும் கடைக்குச் சென்று கும்பலோடு கலந்து பொருட்களை வாங்கி கொண்டாடினார்கள். இவ்வாறு விதிமுறைகளை மீறுவதால், நோய்தொற்று அதிகமாகிறது. இப்படி நோய் பரவுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் பணம் செலவிட வேண்டியுள்ளது. மேலும், மருத்துவர், செவிலியர், மருந்து, வென்டிலேட்டர், மருத்துவமனை, உணவு என தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? விதியை மீறுவோர் எதற்காக அரசிடம் வருகிறார்கள்? பணம் கட்டி சிகிச்சை பெற வேண்டியதுதானே.’ என காட்டமாக பேசியுள்ளார்.