மதுரையில் கட்டிடம் இடிக்கும் பணியின் போது கட்டிடம் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

மதுரையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது, அங்கு பணியாற்றிய வேலையாட்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.

மதுரையில்  கட்டிடம் ஒன்றை இடித்து விட்டு அவ்விடத்தில் மற்றொரு கட்டிடம் கட்டுவதற்காக பணியாட்கள் நியமிக்கப்பட்டு கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போது வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

மூவர் மீது கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தற்பொழுது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

author avatar
Rebekal