ஓமைக்ரானை ஒழிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி மட்டும் போதாது – ஆய்வில் தகவல்..!

ஓமைக்ரானை எதிர்த்து போராட பூஸ்டர் டோஸ் போடுவது அவசியம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டை பொறுத்தவரை கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் இரண்டு டோஸ் கலவையை எடுத்துக் கொண்டவர்களின் ஆன்டிபாடி அளவுகள் ஆறு மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்குகின்றன என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் ஜர்னல் ஆஃப் டிராவல் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜின் விஞ்ஞானி டாக்டர் பிரக்யா யாதவ் கூறுகையில், கொரோனா தடுப்பூசிகளின் கலவையான டோஸை கவனக்குறைவாக செலுத்தியவர்கள் டெல்டா மற்றும் பிற மறுபாட்டிற்கு எதிராக ஒரு நல்ல ஆன்டிபாடி காட்டியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டைப் பொறுத்தவரை (கோவிஷீல்ட் + கோவாக்சின்; கோவாக்சின் + கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் + கோவிஷீல்ட்) ஆன்டிபாடி அளவு தடுப்பூசி போட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைவதாக கூறப்படுகிறது என்று டாக்டர் பிரக்யா யாதவ் கூறினார்.

இந்த ஆய்வில் மூன்று குழுக்கள் ஈடுபட்டனர். அதில் உத்தரபிரதேசத்தில் கோவிஷீல்டின் முதல் டோஸ் மற்றும் கோவாக்ஸின் இரண்டாவது டோஸ் கவனக்குறைவாக எடுத்து கொணட18 நபர்களைக் கொண்ட ஒரு குழுவும், 40 நபர்களை கொண்ட தலா இரண்டு டோஸ் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் பெற்ற  இரண்டு குழுக்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்த்தக்கது.

 

author avatar
Rebekal