தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் …!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

எனவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பிறகு இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal