பங்களாதேஷில் மின்னல் தாக்கி இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு.!

கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு.

பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் முகமது நாடிம் மற்றும் மிசானூர் ரஹ்மான் ஆவர். இவர்கள் இருவரும் டாக்கா நகரின் அருகில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக அவர்களின் கிரிக்கெட் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பங்களாதேஷில் பருவமழையில் மின்னல் காரணமாக பலர் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஆண்டு பங்களாதேஷில் மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-க்கும் கீழ் குறைந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.