வெங்காய விலை உயர்வால் புனேவில் 550 கிலோ வெங்காயம் திருட்டு – இருவர் கைது!

வெங்காய விலை உயர்வால் 550 கிலோ வெங்காயத்தை திருடிய புனேவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும், இந்தியாவில் அதிக அளவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வெங்காயமும் தற்பொழுது விலை உயர்வில் உள்ளது. ஒரு புறம் மழை காரணமாக வெங்காயம் சேந்தமடைந்துள்ளதே விலை உயர்வுக்கு கரணம் என சிலர் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே, வெங்காய பதுக்கல்கள் மற்றும் திருட்டுகள் அதிகம் நடப்பதால் தான் இவ்வாறு விலை உயர்வு ஏற்படுகிறது எனவும் சிலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது புனேவில் உள்ள  மோவிஜி தேவ்ஜாலி கிராமத்தில் இருவர் 550 கிலோ எடை வெங்காயத்தை திருடி உள்ளனர்.

புனேவிலும் வெங்காயம் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், புனேவை சேர்ந்த சஞ்சய் பராதி மற்றும் போபாட் காலே இருவர் 550 கிலோ வெங்காயத்தை திருடி உள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் அறிந்த புனே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உண்மை என கண்டறியப்பட்டதால் அவர்கள் திருடிய வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.எல்) 379, 511 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் புனேவின் நாராயங்கான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
Rebekal