துப்பாக்கிச்சூடு: உயர்பதவி வழங்கியது எப்படி?.. உயர்நீதிமன்றம் காட்டம்..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக  இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பி்ன்னர் தேசிய மனித உரிமை  ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது” துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்கப்படவில்லை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.

ஜனவரி 20 முதல் மீண்டும் வேலை நிறுத்தம்-அண்ணா தொழிற்சங்கம்..!

அப்போது நீதிபதி” தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாயம் தானா..? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் என பலர் மீது நீதிபதி ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டி  உள்ளது.

இப்படி இருக்கையில் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு  எப்படி வழங்கப்பட்டது..? பதவி உயர்வு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய  அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதிகள் கூறினார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை 2.O.! அனுமதி மறுத்த மாநில அரசு.?

பின்னர் அந்த அதிகாரிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து கூடுதல் மனு தாக்கல் செய்ய ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

author avatar
murugan