டிக்டாக் நிறுவனத்திற்கு எதிராக புதிய உத்தரவு பிறப்பித்த டிரம்ப்.!

டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார்.

டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி, டிரம்ப் தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், கடந்த வாரம் அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், டிக்டாக் நிறுவனத்திற்கு எதிராக புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த 90 நாள்களில் டிக்டாக் நிறுவனத்திற்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள அனைத்து விதமான சொத்துகளையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

author avatar
murugan