2 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு ட்ரம்ப் தான் காரணம்! ஜோ பைடன் குற்றசாட்டு!

2 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு ட்ரம்ப் தான் காரணம்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில்  உள்ளது. இந்த பராபரப்பான சூழலுக்கு  மத்தியில், அங்கு வருகிற மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடும் நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு  வருகிறார்.

இந்நிலையில், டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜோ பைடன், தாம் வெற்றி பெற்றால். அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்து, குற்றங்கள் அதிகரிப்பதை தடுத்து, இனவெறியை கட்டுப் படுத்துவேன் என்றும், க்களை அச்சுறுத்தும் ஆயுதம் தாங்கிய இன வெறியர்களின் வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கொரோனா நோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டு, அதை பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த டிரம்ப் மறுக்கிறார் என்றும்,  கொரோனாவுக்கு 2 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழப்பதற்கு டிரம்ப் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.