ட்ரம்ப் அதிரடி – ஐரோப்பிய நாடுகளுடனான விமான சேவைகள் ரத்து.!

அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், பிரிட்டனை தவிர பிற ஐரோப்பா நாடுகளுடனான அனைத்து விமான சேவைகளுக்கு அடுத்த 30 நாட்களுக்கு தடை என்று தெரிவித்தார்.  அமெரிக்காவில் இதுவரை 1,622 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 46 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப், கொரோனா நோய் அமெரிக்காவில் மேலும் பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனவால் 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவு காரணமாக உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை பரவுவதை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்த நிலையில், அனைத்து நாடுகளும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்