அடுத்த வாரம் அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் – திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அடுத்த வாரம் அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தல். 

மணிப்பூர் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அடுத்த வாரம் அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும்; மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் புறக்கணிப்பு நோக்கத்துடனே இருக்கிறது. ஒற்றுமையை வலியுறுத்தி, நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாக அது மாற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.