திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் ரத்து எதிர்த்து தொடர்ந்த இன்று வழக்கு விசாரணை..!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்  ஜாமீன் ரத்து எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நாரதா வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் பிர்காத் ஹக்கிம், சுப்ராதா முகர்ஜி, மதன் மித்ரா சோவன் சட்டர்ஜி ஆகிய 4 பேரை நாரதா வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று முன்தினம் சிபிஐ விசாரணைக்கு அழைத்து 4 பேரையும் கைது செய்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்ததாக தகவல் வெளி வந்தவுடன் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்கு நேரடியாக சென்றார்.அங்கு சென்ற மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம்.

மேலும் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சிபிஐ அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார். பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சிபிஐ நீதிமன்றத்தில் 4 தலைவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் உடனடியாக சிபிஐ கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமீன் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதனால், 4 தலைவரும் சிபிஐ வசம் இருந்தன. இதை தொடர்ந்து நேற்று அதிகாலையில் சுப்ராதா முகர்ஜி, மதன் மித்ரா சோவன் சட்டர்ஜி ஆகிய மூன்று பேருக்கு அடுத்தது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அமைச்சர் பிர்காத் ஹக்கிம் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் ரத்து எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

பிர்காத் ஹக்கிம், சுப்ராதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகிய 3 பேரும் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதில், பிர்காத் ஹக்கிம், சுப்ராதா முகர்ஜி,  அமைச்சராக பொறுப்பேற்று உள்ளனர். சோவன் சட்டர்ஜி கட்சியில் இருந்து விலகி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan