10 மீட்டர் தூரத்தில் நோயாளியை நிற்க வைத்து சிகிச்சை .! மருத்துவருக்கு நோட்டீஸ்.!

இளைஞர் ஒருவரை 10 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து,  சிகிக்சை பார்த்த மருத்துவருக்கு நோட்டிஸ்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த  மருத்துவமனையில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் ஒரு நாற்காலி வைத்து அதில் நோயாளியை அமர வைத்து தூரத்தில் இருந்தபடி மருத்துவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், இளைஞர் ஒருவரை 10 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து,   மருத்துவர் தான் உட்கார்ந்த இடத்திலிருந்து “டார்ச்” அடித்துப் பார்த்து அவருக்கு சிகிச்சையை அளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

இதுகுறித்து, அம்மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குநர் செந்தில்குமாரைக் கேட்டபோது, இருவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் சுமார் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan