தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33வது இடம்..

தமிழக அமைச்சரவையில் புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33வது இடம்.

மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு மகனுமான டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புதிய அமைச்சராக பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இதில், புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர்கள் வரிசையில் 33வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் அமைச்சரவையில் இணைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரிசையில் 10வது இடம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் 28-ஆவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில், புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்