நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் – வேளாண் அமைச்சர்

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.

இன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

இதில், மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் .தெரிவித்துள்ளார் மேலும் மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.