டாப் 10 உலக கோடீஸ்வரர்கள் – ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி!

ஒவ்வொரு ஆண்டின் முடிவில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஹூரன் என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது,அதன்படி,2021 ஆம் ஆண்டிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரே இந்தியர்:

இந்நிலையில்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி,உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசை 2022-இல் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்று ஹூருன் ஆய்வு நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஆசியப் பணக்காரர் :

64 வயதான முகேஷ் அம்பானியின்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 24 சதவிகிதம் அதிகரித்து 103 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆசியப் பணக்காரர் என்ற பட்டத்தை அவர் தக்க வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு, சில்லறை மற்றும் எரிசக்தி வணிகத்தில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக,கடந்த ஆண்டு ரிலையன்ஸ் பங்குகள் முன்னதாக 22 சதவீதம் உயர்ந்தன என்று ஹுருன் இந்தியா ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

9-வது இடம்-ஒரே இந்தியர்:

இந்நிலையில்,முகேஷ் அம்பானி,சுமார் 7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசையில் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.இதன்மூலம்,டாப் 10 வரிசையில் இடம் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முதல் மூன்று இடங்கள்:

இதனிடையே,உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் CEO எலோன் மஸ்க், மற்றும் இரண்டாவது இடத்தில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மூன்றாவது இடத்தில LMVH CEO பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.