Top10: அகில இந்திய கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டயலில் தமிழக கல்லூரிகள் அசத்தல் !

நாட்டின் சிறந்த தரவரிசையில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

இந்தியாவின் சிறந்த கல்லூரிகள்

NIRF இந்திய தரவரிசை 2022 இன் படி, முதலுடத்தில் மிராண்டா ஹவுஸ்-டெல்லி கல்லூரி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்து கல்லூரி-டெல்லி(2), பிரசிடென்சி கல்லூரி-சென்னை(3), லயோலா கல்லூரி-சென்னை(4) மற்றும் பெண்களுக்கான லேடி ஸ்ரீ ராம் கல்லூரி-டெல்லி 5வது இடத்திலும் உள்ளன.

மேலும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி-கோவை 6-வது இடமும், ஆத்மா ராம் சனாதன் தர்மா கல்லூரி-டெல்லி (7), செயின்ட் சேவியர் கல்லூரி-கொல்கத்தா (8), ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திரா – ஹவுரா(9) மற்றும் கீரோரி மால் கல்லூரி-டெல்லி 10வது இடம் பெற்றுள்ளன.

colleges

இந்தியாவின் முதல் 10 பல்கலைக்கழகங்கள்

சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில், பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு), இந்தியாவின் இரண்டாவது சிறந்த பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து புதுதில்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

university

author avatar
Varathalakshmi

Leave a Comment