டோக்கியோ ஒலிம்பிக்: கிரீஸ் வீரர் மில்டியாடிஸ் தங்கம் வென்றார்..!

ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸின் மில்டியாடிஸ் தங்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸின் மில்டியாடிஸ் வென்றார். கியூபாவின் ஜுவான் மிகுவல் எச்செவரியா வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே நேரத்தில் கியூபாவின் மேகெல் மாசோ வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

மில்டியாடிஸ் 8.41 மீ நீளம் தாண்டி தங்கம் வென்றார். எச்செவரியா தனது மூன்றாவது முயற்சியில் 8.41 மீ நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும்,  மேகெல் மாசோ 8.21 மீ நீளம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

author avatar
murugan