Today’s Live : ஈரோடு கிழக்கு தேர்தல்..! அதிமுக வழக்கு நாளை விசாரணை..!

ஈரோடு கிழக்கு தொகுதி தொடர்பான அதிமுக வழக்கு நாளை விசாரணை :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் அளித்த மனுவை, தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.

அவர் தாக்கல் செய்த மனுவில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் இந்த ஓட்டுகளை கள்ள ஓட்டுகளாக பயன்படுத்தக் கூடும் என சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

2023-02-15 06:48 PM
மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம்:

மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து கற்பமாக்கிய 21 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அம்பாட் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பிரஹலாத் பாகுரே, குற்றவாளி யோகேஷ் சாஸ்தேவுக்கு ரூ.2,500 அபராதமும் விதித்துள்ளார்.

2023-02-15 05:21 PM
கோயில்களின் ஆகம விவகாரம் : 

கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகன் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும்  அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Readmore : கோவில் ஆகம விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.!

2023-02-15 01:12 PM
நியூசிலாந்தின் வெலிங்டனில் நிலநடுக்கம் :

நியூசிலாந்தின் வெலிங்டன்னில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இத்தகைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள்,கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Readmore : #Breaking : நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .!

2023-02-15 12:51 PM
அதானி பங்குகள் 15 அமர்வுகளில் ரூ.10.45 லட்சம் கோடி இழப்பு : 

சென்செக்ஸில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் சந்தை மூலதனம் ரூ.8.75 லட்சம் கோடியாகக் குறைந்ததால் இன்று சுமார் ரூ.5,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த 15 அமர்வுகளில் பங்குகள் சுமார் ரூ.10.45 லட்சம் கோடியை இழந்துள்ளன.

adanigainlow

2023-02-15 12:18 PM
தியேட்டர்கள் மீது நடவடிக்கை :

திரைப்பட டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா.? என தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.

Readmore : அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்- உயர்நீதி மன்றம்.!

chennaihighcourt

2023-02-15 11:14 AM
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை :

திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கைதுசெய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு எஸ்.பி கார்த்திகேயன் மறுப்பு தெரிவித்துள்ளார். 6 பேர் கைது நிலையில் இதுவரை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த குற்றவாளிகளை கைதுசெய்யவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Readmore : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது.? மறுப்பு தெரிவித்த காவல்துறை.!

2023-02-15 10:37 AM
CBSE போர்டு தேர்வு 2023:

சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளுக்கு, மாணவர்கள் பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையை அணிந்து, அட்மிட் கார்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்து வர வேண்டும்.

Readmore : #BREAKING: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியது!

2023-02-15 10:19 AM
author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment