220 விமானங்களை வாங்க இந்தியா முடிவு.! இது ஒரு வரலாற்று ஒப்பந்தம்.. அமெரிக்கா பாராட்டு.!

200க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. – அமெரிக்க அதிபர் பெருமிதம்.

மத்திய அரசானது தற்போது ஏர் இந்தியாவிற்கு புதியதாக 220 விமானங்களை வாங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதனை வெள்ளை மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா பெருமை : உலக உற்பத்தியை அமெரிக்காவால் வழி நடத்த முடியும். 200க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்புகள் : மேலும், இதன் மூலம் அமெரிக்காவில் 44 மாநிலங்களில் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமாக வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும். இந்த அறிவிப்பு அமெரிக்க – இந்திய பொருளாதாரம் கூட்டமைப்பை வலிமையாக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று ஒப்பந்தம் : மேலும், இந்த புதிய ஒப்பந்த மூலம் இருநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும். இது இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் நிகழ்வாகும். இந்த ஒப்பந்தம் வரலாற்று ஒப்பந்தம் என வெள்ளை மாளிகை ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment