இன்றைய (04.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம்: இன்று நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.  நினைத்தது நிறைவேறுகின்ற  நல்ல நாள். முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணப்பேச்சுக்கள் நல்ல முடிவாகும்.தொழில் வழியில் வளர்ச்சி கூடும்.

ரிஷபம் : இன்று கவலைகள் அகன்று தெளிவு பிறக்கும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாடுகள் மூலமாக பொது வெளியில் புகழ் கூடும். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.

மிதுனம் : இன்று நினைத்தது நிறைவேறும் நல்ல நாள். நீண்ட தூரத்திற்கான இடமாற்றம் வர வாய்ப்புள்ளது.அரசு வழியில் எதிர்பார்த்தவைகள்  கிடைக் கும்.இன்று நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப்பிடிப்பை சற்று தளர்த்திக் கொள்வீர்கள்.

கடகம் : மகிழ்ச்சி பெருகுகின்ற  நாள். உங்களின் மதிப்பும் – மரியாதையும் பன்மடங்கு உயரும். அலைபேசி மூலமாக பொன்னான தகவல் ஒன்று வந்து சேரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வரவு எதிர்பார்த்தப்படி இருக்கும்.

சிம்மம் :இன்று நெடுநாட்களாக ஏற்பட்டு வந்த தடைகள் அகலும் நாள். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உங்களின் மன மாற்றத்தைக் கண்டு நண்பர்கள் ஆச்சரியமடைவர்.இன்று  திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே அப்படியே  நடைபெறும் நல்ல நாள்.

கன்னி :இன்று மனதிற்கினிய சம்பவத்தால் மகிழ்ச்சி காணும் நாள். விரயத்திற்கேற்ற வரவு கிடைக்கும். குடும்பத்தினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். இடம் வாங்க எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

துலாம் :இறைவழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். விரயங்கள் சற்று கூடும். சிரித்துப் பேசுகின்ற நண் பர்கள் சிலரால் சிக்கல்கள் ஏற்படலாம். மறதியால் செய்யும் வேலையில் தோய்வு ஏற்படலாம். ஆரோக்கியத்தி அக்கரை தேவை.

விருச்சிகம் :இன்று வெற்றிகள் வாயிற்கதவை தட்டும் நாள். வி.ஐ.பி.க்கள் உங்களின் வீடு தேடி வருவர்கள். புதிய ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.நண்பர்கள் வழியில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

தனுசு:இன்று வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டுகின்ற நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உங்களை வந்துசேரும்.  பாக்கிகள்  எல்லாம் வசூலாகிப் பரவசப்படுவீர்கள். மற்றவர்களுக்காக  முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

மகரம் : இன்று நீங்கள் கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் மேலும் விரிவடையும். திருமணக் கனவுகள் நனவாகும்.

கும்பம் : இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகி மகிழும் நாள். அஞ்சல் வழியில் ஒரு அனுகூலமான செய்தி  வர வாய்ப்புள்ளது. குடும்பத்தினரிடையே  ஏற்பட்ட தகராறுகள் அகலும். அனுபவ மிக்கவர்களின் ஒத்துழைப்பு தொழிலில் வளர்ச்சிக்கு கிடைக்கும்.

மீனம் : இன்று உங்களின் மீது உங்களுக்கே தன்னம்பிக்கை கூடும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டம் ஒன்றைத் தீட்டு செயல்படுவீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும்.மேலும் ஆலய வழிபாட்டின்  மூலம் அமைதியை பெறலாம்.

author avatar
kavitha