#TodayPrice:சதத்தை விட்டு குறையுமா பெட்ரோல்,டீசல் விலை- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு!

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியதால் பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும்,கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக,எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இந்நிலையில்,சென்னையில் இன்று 16-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,டெல்லி-மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.அதன்படி,

  • டெல்லி பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.105.41 மற்றும் டீசல் ரூ.96.67 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
  • மும்பையில் இன்று எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.120.51 மற்றும் டீசல் ரூ.104.77-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
  • கொல்கத்தாவிலும் எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115.12 மற்றும் டீசல் ரூ.99.83-க்கும் விற்பனை.

எனினும்,கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயரவில்லை என்றாலும் கூட,சதத்தை விட்டு அவை குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.எனவே,பெட்ரோல் டீசல் விலை சதத்தை விட்டு பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.