#TodayPrice:பெட்ரோல்,டீசல் விலையின் இன்றைய நிலவரம் இதுதான்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அதன்படி,சென்னையில் இன்று 43-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

  • அதைப்போல,டெல்லியில் பெட்ரோல் ரூ.105.41-க்கும்,டீசல் லிட்டருக்கு ரூ.96.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மும்பையில் பெட்ரோல் ரூ.120.51,டீசல் லிட்டருக்கு ரூ.104.77-க்கு விற்பனை.
  • மேலும்,கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.115.12-க்கும்,மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.99.83-க்கும் விற்பனை.

இதனிடையே,தற்போது உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 113 டாலராக இருப்பதால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:

தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9224992249 என்ற எண்ணுக்கும்,பிபிசிஎல் நுகர்வோர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் பெட்ரோல்,டீசல் விலை குறித்த தகவல்களைப் பெறலாம். அதைப்போல்,HPCL நுகர்வோர் HPPrice <Space>Dealer Code ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment