#TodayPrice:சதத்தை விட்டு குறையாத பெட்ரோல்,டீசல் விலை – விரைவில் மலிவு விலையில்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையாகிறது.

அதன்படி,சென்னையில் இன்று 44-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சூழலில் வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதி தரும் வகையில்,மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,கடந்த பல வருடங்களாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதனுடன் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில்,அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெட்ரோல் பங்குகளில் 20% எத்தனால் கலவையுடன் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் பெட்ரோல்,டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:

தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9224992249 என்ற எண்ணுக்கும்,பிபிசிஎல் நுகர்வோர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் பெட்ரோல்,டீசல் விலை குறித்த தகவல்களைப் பெறலாம். அதைப்போல்,HPCL நுகர்வோர் HPPrice <Space>Dealer Code ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment