இன்றைய (02.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உறுதியுடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம் : இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் லட்சியத்தை அடைய விரைவாக செயல்படுவீர்கள். இன்று மிகவும் ஆர்வமாக காணப்படுவீர்கள்.

மிதுனம் : நீங்கள் விரும்பிய பலன் கிடைக்காது. உங்கள் நம்பிக்கையை அது மிகவும் பாதிக்கும். கோவிலுக்குச் செல்லுதல், தியானம் மேற்கொள்வதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கடகம் : நீங்கள் எதிர்பார்த்த நாள் இன்று இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க கூடாது. உங்கள் சொந்த முயற்சியை நம்புங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். வளர்ச்சி உள்ள நாள். உங்கள் கடின முயற்சியின் மூலம் கடினமான செயல்கள் கூட எளிதாக முடிந்து விடும்.

கன்னி : நீங்கள் எதிர்பார்க்காத பலன்கள் கிடைக்கும். வலிமையுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியை கொடுக்கும். பெரியவர்கள் ஆதரவு தருவார்கள்.

துலாம் : சற்று மந்தமான நாளாக இன்று இருக்கும். பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சற்று சிந்தித்து செயல்பட்டால் அதனை தவிர்க்கலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கான நாள் இல்லை. பாதகமான விளைவுகளை தடுக்க சிந்தித்து செயல்படுங்கள். பணம் செலவு ஏற்படும் நாள்.

தனுசு : வளர்ச்சி உள்ள நாள். உங்கள் முயற்சி வெற்றியை கொடுக்கும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

மகரம் : நீங்கள் விரும்பும் பலன் இன்று கிடைக்காது. மற்றவர்களுடன் நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். நண்பர்களை சந்திக்க வேண்டாம். இறைவழிபாடு மனநிம்மதியை தரும்.

கும்பம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். எந்த செயலையும் தொடங்கும் முன் சிந்தித்து செயல்பட வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் இருக்கக்கூடும் கவனமுடன் கையாள வேண்டும்.

மீனம் : சாதகமான பலன்கள் கிடைக்காது. குழப்பமான மனநிலை உண்டாகும். நீங்கள் நினைத்ததை தெளிவாக கூற முடியாது. கவனமுடன் பேச வேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.