இன்றைய நாள் (27.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ.. மேஷம் : இன்று

By manikandan | Published: Jun 27, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..

மேஷம் : இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக  இருக்கும். உங்களுக்கான சௌகரியங்கள் குறைந்து காணப்படும். பொறுமையை கையாள வேண்டியது அவசியம்.

ரிஷபம் : பயணம் ஏற்படும் சூழல் உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக செயல்களை செய்ய வேண்டும். நன்கு யோசித்து செயல்பட வேண்டும்.

மிதுனம் : இன்றைய  பணிகள் உங்களுக்கு எளிதாக நிறைவேறும். நன்மைகள் உண்டாகும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நாள்.

கடகம் : இன்று உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செயல்படுத்த வேண்டும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக செயலாற்ற வேண்டும்.

சிம்மம் : இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுபவீர்கள். அது உங்களுக்கு மன ஆறுதலை பெற்றுத்தரும்.

கன்னி : இன்று உங்களுக்கு சில தடைகள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நேர்மறையான எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

துலாம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்கள் செயல்களில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

விருச்சிகம் : இன்று வெற்றி கிட்டும் நாள். உங்களின் வார்த்தைகள் மூலம் மற்றவர்களை கவர்ந்து விடுவீர்கள். வெற்றிகள் அதிகம் கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் உச்சத்திற்கு செல்கிறீர்கள்.

தனுசு : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். அது உங்களுக்கு ஆறுதலை பெற்றுத்தரும். தெளிவான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.

மகரம் : இன்று நீங்கள் கவனமாக செயல்படவேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கும்பம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியுள்ள நாள். உங்களின் கடின முயற்சி வெற்றிகளை தேடித் தரும்.

மீனம் : இன்று உங்களுக்கு தடைகள் காணப்படும். அதனை தகர்த்து நீங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் நல்லதுக்காக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Step2: Place in ads Display sections

unicc