இன்றைய நாள் (19.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று நீங்கள் செய்யும்

By manikandan | Published: Jun 19, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் சற்று கடினமாக அமையும். உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும். அமைதியாக செயல்பட வேண்டும்.

ரிஷபம் : இன்று நீங்கள் மன உறுதியுடனும் பொறுமையுடனும் செயல்களை செய்ய வேண்டும். தாமதங்கள் ஏற்படும். அது உங்களுக்கு கவலையை தரும்.

மிதுனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

கடகம் : இன்று உங்களிடம் இருக்கும் ஆர்வத்தால் நீங்கள் விரைந்து செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் நலனுக்கான முடிவுகளை விரைந்து எடுப்பீர்கள். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியை தரும். முன்னேறுவதற்காக இன்று முயற்சி செய்யுங்கள். இறை வழிபாடு இன்றியமையாதது.

துலாம் : இன்று ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்வீர்கள். எதனையும் நேர்மையாக அணுக வேண்டும். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களுக்கு நல்ல வழியை அமைத்து தரும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் சமநிலையுடன் காணப்படுவீர்கள். குறைந்த முயற்சி அதிக பலனை தரும். சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டிய நாள்.

தனுசு : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பிரியமானவர்களின் இதயத்தில் இன்று இடம் பிடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

மகரம் : ஏதோ ஒன்றை இழந்தது போல இருக்கும். மனச்சோர்வுடன் காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து மனதினை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.

கும்பம் : எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். அதனை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வெற்றி கிடைப்பது கடினமாகிவிடும்.

மீனம் : இன்று நீங்கள் துடிப்புடன் இருப்பீர்கள். வெற்றிக்காக  முயற்சி செய்வீர்கள். மனதினை திடமாக வைத்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும்.

Step2: Place in ads Display sections

unicc