இன்றைய நாள்(09.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்காக ராசி பலன்கள்…

மேஷம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். தகவல் பரிமாற்றம் சரிவர அமையாததால் பிரச்சனைகள் ஏற்படும். புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள்.

ரிஷபம் : விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும். பிரியமானவர்களை வீட்டிற்கு அழைக்கும் சூழல் உருவாகும். உங்கள் முயற்சி வெற்றியடையும்.

மிதுனம் : இன்று உங்களுக்கு சிறந்த வளர்ச்சி காணப்படும். செயல்களை விரைந்து செய்து முடிப்பீர்கள். 

கடகம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இலட்சியங்கள் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு. 

சிம்மம் : வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். 

கன்னி : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. நல்ல இசை மன ஆறுதலை தரும்.

துலாம் : தொடர் முயற்சி வெற்றிகளை பெற்றுத்தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இன்று நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

விருச்சிகம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். அது உங்கள் இலட்சியத்தை அடைய உதவும்.  இன்று கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டால், நல்ல பலனை காண முடியும்.

தனுசு : இன்று அனைத்தையும் சாதாரணமாக அணுகுங்கள். பிறருடன் நட்பு பாராட்டுங்கள். 

மகரம் : மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீக்கிவிடுங்கள். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கபடலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கும்பம் : இன்று உங்களிடத்தில் பிரச்சினையும் அதனால் மன குழப்பமும் காணப்படும். அதனை தவிர்த்து மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.

மீனம் : இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சுறுப்பாகவும் இருப்பீர்கள். உங்களிடம் ஆற்றல் அதிகமாக காணப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.