இன்றைய நாள் (01.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று

By manikandan | Published: Aug 01, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று தைரியம் குறைவாக இருக்கும். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். நம்பிக்கையுடன் செயல்களை செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.

ரிஷபம் : நல்ல பலன் தரும் நாள். மாற்றங்கள் உண்டாகும். நகைச்சுவையான போக்கு நல்லதை தரும்.

மிதுனம் : செயல்களை விரைந்து செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு முன்னேற்றத்திற்கான பலன்களை கொடுக்கும்.

கடகம் : வெளியிடங்களுக்கு செல்வதை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்துவது நல்லது.

சிம்மம் : இன்று வளர்ச்சி குறித்த கவலையில் இருப்பீர்கள். நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திகொள்ள வேண்டும். அதன் மூலம் நீங்கள் திருப்திகரமாக உணரலாம்.

கன்னி : செயல்களை சிறப்பாக செய்து வெற்றியை பெறுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

துலாம் : பிறருடன் பேசுகையில் கவனமுடன் பேச வேண்டும். இல்லையென்றால் நல்லது நடக்க தாமதமாகும். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம் : நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் பிரச்சினைகள் குறையும். கோவிலுக்கு செல்வது மன ஆறுதலை தரும்.

தனுசு : இன்றைய நாள் சமநிலையாக இருக்காது. சில சூழ்நிலைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். சூழ்நிலைகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

மகரம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். புதிய முயற்சியில் நீங்கள் ஈடுபடலாம்.

கும்பம் : இன்று வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மீனம் : இன்று அன்றாட நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். வளர்ச்சிக்கு ஏற்ற நல்ல நாள் அல்ல.

Step2: Place in ads Display sections

unicc