இன்றைய நாள் (01.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று உங்களுக்கு விருப்பமான

By manikandan | Published: Jun 01, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும். வளர்ச்சியுள்ள நாள். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

ரிஷபம் : இன்றைய நாள் சுமாராக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலன்களை தரும்.

மிதுனம் : மன வருத்தங்கள் காணப்படும் நாள். அதனை தவிர்த்தல் நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மனஆறுதலை தரும். 

கடகம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள். பிறருக்கு உதவுவதன் மூலம் மனஆறுதல் கிடைக்கும். வெளிப்படையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

கன்னி : இன்று நீங்கள் தாமதமாக செயல்படுவீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டும். இறை வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம்  மனஆறுதல் பெறலாம்.

துலாம் : இன்று தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது ஆகவே பொறுமையாக செயல்பட வேண்டும். இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாவது மனஆறுதலை தரும். 

விருச்சிகம் : உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். கடினமான பணிகள் கூட எளிதாக செய்து முடியும்.

தனுசு : இன்று உங்களுக்கு சாதகமான நிகழ்வுகள் நடைபெறும் நாள். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். ஆற்றல் நிறைந்து காணப்படுவீர்கள்.

மகரம் : இன்றைய நாள் மகிழ்சிகரமாக அமையாது. விரும்பியதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். செயல்களில் தாமதங்கள் ஏற்படும். நல்ல முறைகளை பின்தொடருங்கள்.

கும்பம் : உங்களுக்கான விருப்பமான பலன்கள் இன்று கிடைக்காது. எதிர்பார்ப்புகளும் குழப்பங்களும் காணப்படும் நாள். பிரார்தனைகளை மேற்கொள்ள வேண்டும். 

மீனம் : இன்று மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். புது புது தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திகொள்ளுங்கள். விழாக்களில் கலந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

Step2: Place in ads Display sections

unicc