தமிழகத்தின் மறுமலர்ச்சி கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் நினைவு தினம் இன்று…!

தமிழகத்தின் மறுமலர்ச்சி கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சிவதாணுப்பிள்ளை ஆதிலட்சுமி தம்பதியருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்தவர் தான் தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். ஒன்பதாவது வயதிலேயே தனது தந்தையை இழந்த தேசிக விநாயகம் பிள்ளை, எம்.ஏ படித்து ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

1901 ஆம் ஆண்டு உமையம்மை எனும் பெண்ணை திருமணம் செய்த இவர், முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முதன்முதலில் குழந்தைகளுக்கான பாடல்களை தமிழில் எழுதத் தொடங்கிய இவர், தொடர்ச்சியாக பல்வேறு பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராக திகழ்ந்துள்ளார்.

பல அரிய பணிகளை ஆற்றிய இவர் மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தனது 78 ஆவது வயதில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

author avatar
Rebekal