தேர்வர்கள் கவனத்திற்கு…இன்றே கடைசி நாள்;இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?..!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல்  விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை முன்னதாக தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/   என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,அதன்பின்னர் மே 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.மேலும்,இது தொடர்பாக,யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகியவற்றிற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க,தேர்வுக்கான ஆன்லைன் சமர்ப்பிப்பு மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை 30 மே 2022 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது.எனவே,இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் UGC NET இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ugcnet.nta.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை மே 31 முதல் ஜூன் 1 வரை இரவு 9:00 மணி வரை திருத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக,கொரானா காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில்,அத்தேர்வும்,நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ள தேர்வும் ஒரே சமயத்தில் ஜூன் மாதத்தில்  நடைபெறுகிறது.ஆனால்,தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

UGC NET 2022: எப்படி விண்ணப்பிப்பது:

  • https://ugcnet.nta.nic.in/ என்ற இனையதளத்திற்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில்(homepage) உள்ள UGC-NET டிசம்பர் 2021 & ஜூன் 2022க்கான விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.முதலில் புதிய பதிவை (New Registration) கிளிக் செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப தொடரவும்.
  • தேவையான விவரங்களை உள்ளிட்டு,ஆவணங்களைப் பதிவேற்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப்(confirmation page) பதிவிறக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,100; பொது-EWS, OBC-NCL-க்கு ரூ.550 மற்றும் SC, ST, PwD, மூன்றாம் பாலினத்தவர்களுக்கள் ரூ.275  செலுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

Leave a Comment