இந்தியாவின் ஆறாவது பிரதமரும், அரசியல்வாதியுமாகிய ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் இன்று….!

இந்தியாவின் ஆறாவது பிரதமரும், அரசியல்வாதியுமாகிய மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் ராஜீவ் காந்தி. இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார். மேலும், இவருக்கு அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவரது தாயார் இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட இவரது தம்பி சஞ்சய் காந்தி விமான விபத்தொன்றில் காலமாகியுள்ளார்.

அதன் பின் மிகுந்த தயக்கத்துடன் இவர் அரசியலுக்கு வந்துள்ளார். பின் இவரது தம்பி சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதியில் 1981 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன் பின் 1991ஆம் ஆண்டு மே 21 தேதி ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு 1991 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal