ஓடிடியில் வெளியாகும் செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் “சாணிக்காயிதம்”.?

சாணிக்காயிதம் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியீட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன் ஹீரோவாக சாணிக்காயிதம் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதில் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கினர்.

இந்த நிலையில், திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியீட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.