சியான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான அப்டேட்.??

சியான் 60 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று  வெளியாகவுள்ளது. 

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.