சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி பிறந்த தினம் இன்று …!

சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1907 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் பிறந்தவர் தான் துர்காவதி தேவி. இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தை சேர்ந்த பகவதி சரண் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் செயல் துடிப்போடு விடுதலை போராட்ட வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

தன் கணவருடன் இணைந்து தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்டத்துக்காக செலவழித்த இவர் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு பழி வாங்குவதற்காக கட்சி கூட்டம் ஒன்றையும்  நடத்தியுள்ளார். லாலா லஜபதி ராயின்  மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட் என்பவரை கொலை செய்ய முடிவு எடுத்து, முதலில் தானே இந்த பணியை மேற்கொள்வதற்கு தேவி முன் வந்துள்ளார்.

ஆனால் இறுதியாக பகத்சிங் மற்றும் சுகதேவியிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் 1940 ஆம் ஆண்டு தனது கணவர் மறைந்து விடவே லக்னோவில் ஏழைக் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி கூடத்தையும் இவர் தொடங்கி வைத்துள்ளார். இந்திய அக்னி என போற்றப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி 1999ஆம் ஆண்டு தனது 92 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

author avatar
Rebekal