தூத்துக்குடியில் பனிமயமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை…!

பனிமயமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதுண்டு.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி இந்த விழா நடைபெற்றது. அதே போல இந்த ஆண்டும் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பொது மக்களின் பங்கேற்பு இன்றி திருவிழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  பனிமயமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.