Connect with us

10,000 கி.மீ சாலை முதல்.. 77 லட்சம் பேருக்கு வேலை வரை… முதலமைச்சரின் அசத்தல் அறிவிப்புகள்.!

Tamilnadu CM MK Stalin

தமிழ்நாடு

10,000 கி.மீ சாலை முதல்.. 77 லட்சம் பேருக்கு வேலை வரை… முதலமைச்சரின் அசத்தல் அறிவிப்புகள்.!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் துறைரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது அந்தத்துறை அமைச்சர்கள் , உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தது மட்டுமல்லாது, துறை ரீதியிலான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.

அதே போல இந்த கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளையும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் மூலம் கிடைத்த பலன்கள் பற்றியும் தெரிவித்தார். முதல்வர் அறிவித்த திட்டங்களில் சில முக்கிய தகவல்களை இதில் காணலாம்…

ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக 10 ஆயிரம் கி.மீ சாலையானது, 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 77,78,999 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கு தொடங்கியுள்ளனர்.

என்னுடைய கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பயிற்சி மூலம் படித்த 3,06,459 நபர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக தொழிலாளர்கள் நலத்துறை சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 2,01,596 இளைஞகர்ளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக கடந்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 30 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

திருச்சி மாநகரில் கலைஞரின் பெயரால் மாபெரும் அறிவுசார் மையம் மற்றும் மிகப்பெரிய நூலகம் ஆகியவை அமைக்கப்படும்.

இவ்வாறு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக சட்டப்பேரவை விதி 110இன் கீழ் முதலைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

Continue Reading

More in தமிழ்நாடு

To Top