திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முருகதாஸ்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :
பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.அதில் திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பாக, இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மதியம் 1 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முருகதாஸ்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…