அமெரிக்க குடியிருப்பு பகுதியில் குதுகலமாக நடந்து சென்ற புலி – வைரல் வீடியோ உள்ளே!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் குதுகலமாக நடந்து சென்றுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக புலி ஒன்று சுற்றித் திரிந்து உள்ளது. குடியிருப்பு அதிகம் நிறைந்த பகுதியில் நடந்து திரிந்த புலியை கண்ட மக்கள் அலறியடித்து கூச்சலிட தொடங்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் அந்த புலி எதையும் கண்டுகொள்ளாமல் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அங்குமிங்குமாக ராஜ நடை போட்டு வலம் வந்துள்ளது. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் புலி எப்படி இவ்விடத்துக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது இது குறித்து தெரிவித்த குடியிருப்புவாசிகள் அதிகாலையில் வெளியில் வருவதற்காக எழுந்து பார்க்கும் பொழுதே புலி தான் கண்ணுக்குத் தெரிந்தது எனவும் சிலர் மற்ற மக்களின் கூச்சல் கேட்டு தாங்கள் எழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் புலி எங்கிருந்து வந்தது?அந்த புலியை மீண்டும் யார் அழைத்துச் சென்றது என்பது குறித்த தகவல்கள் எதுவுமே அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை. அப்பொழுது ஹூஸ்டன் பகுதி காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் துப்பாக்கியுடன் புலியை கொள்ளுவதற்காக நின்று கொண்டு இருந்துள்ளனர். அதில் ஒருவரை நோக்கி இந்த புலி சென்றுள்ளது. தோப்பாக்கி கையில் இருப்பினும் அவரும் பயத்தில் கூச்சலிடத் தொடங்கியுள்ளார். ஆனால் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்த ஒருவர் தான் புலியை அடக்கி அழைத்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal