முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம்!

முந்திரி பருப்பு லாரியை கடத்தியை வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.

தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் கடந்த நவம்பர் 27-ஆம் கைது செய்யப்பட்டார். 12 டன் முந்திரி கடத்தல் தொடர்பாக ஜெபசிங்  உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடைபெற்றது.

முந்திரி கடத்தலில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரி பருப்பு லாரியை கடத்தியை வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்