வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்கள் கைது…!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர்களை கைது செய்த போலீசார்.

கடந்த சில நாட்களுக்கு  முன், திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.  இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது.

போலீசார் நடவடிக்கை 

இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியான செய்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபேஷ்குமாரை கைது செய்து திருப்பூர் சைபர் கிரைம் தனிப்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதே போல், வதந்தி பரப்பியாயதாக செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கியிருந்த ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை காவல்துறையின் கைது செய்துளளனர். இரு பிரிவினர் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடந்தையாக இருந்த மேலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment