29 C
Chennai
Wednesday, June 7, 2023

ஜூன் 17-ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு...

இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போல உள்ளது – ஓபிஎஸ்

ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை...

யாஷிகாவுடன் காதலா..? அந்தர் பல்டி அடித்த அஜித் உறவினர் ரிச்சர்ட்..!!

நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – இன்று 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

இன்று தமிழகத்தையே கண்ணீர் கடலில் மூழ்கடித்த நாள் என்றே சொல்லலாம். ஆம்…. ஸ்டெர்லைட்க்கு எதிராக 100 நாட்கள் அமைதியாக போராடிய அப்பாவி மக்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்தனர். இன்று அவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சொல்லமுடியாத துயரமான இந்த நாளில், பலியான 13 பேருக்கும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மரியாதையும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.