ரசிகர்கள் அழுதால் தான் இந்த படம் வெற்றி – ஹரி.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள்.

இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், பிரியா பவானி சங்கர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஹரி ” இது ரொம்ப எமோஷனல் ஆன கதை. நம்ம வந்து ஒரு பிரச்சனைய தூக்கி சுமக்குறோம். குடும்பத்தை தூக்கி சுமக்கிறோம். நண்பன தூக்கி சுமக்கிறோம். மிகுந்த பொறுமையான விலங்கு ஆனால் அதற்கு கோபம் வந்தால் என்ன ஆகும். அது தான் படத்தின் கதை இதில் எனது பாணியிலான படு வேகம் இருக்காது.

ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட இருக்காது ஒரு எமோல்சலான பீல் குட்படமாக ஆயன்ஸ் இருக்கும் இரண்டு இடத்திலாவது ஆடியன்ஸ் கண்ணீர் சிந்தினால் இந்த படம் வெற்றி அப்படி யோசித்து இந்த படத்தை எடுத்துள்ளேன்” என பேசியுள்ளார்.

Leave a Comment